உங்க தலைமுடி கருமையில்லாம செம்பட்டையா இருக்கா? இதை எவ்வாறு போக்கலாம்?
எல்லாருக்கும் கருமையான அழகான கூந்தல் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நிறைய பேர்கள் இளம் வயதிலேயே முடி செம்பட்டையாக மாறி விடுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் கூந்தலை சரியாக பராமரிக்காமல் இருப்பது தான். கூந்தலுக்கு தேவையான போஷாக்கு கிடைக்காத போது கூந்தலின் நிறமானது மங்கிப் போய் விடுகிறது.
நாம் பயன்படுத்தும் இராசயனங்கள் நிறைந்த ஷாம்புகள், முடி பராமரிப்பு பொருட்கள் போன்றவை உங்க தலைமுடியில் பிரச்சினைகளை உண்டாக்கலாம். தலைமுடியின் மெலனின் உற்பத்தி பயன்பாட்டில் பாதிப்பை உண்டாக்கி நிறமிழப்பை ஏற்படுத்தலாம்
இப்படி செம்பட்டை நிறம் முடியை எட்டி பார்க்கும் போதே நாம் எச்சரிக்கையாக பாதுகாத்து கொள் ளவும் பராமரிக்கவும் வேண்டும். இல்லையென்றால் கூந்தல் பிரச்சனையோடு இளநரையும் விரைவில் எட்டிபார்க்க தொடங்கும்.
எனவே இவற்றில் ஆரம்பத்திலே தீர்வு காணுவது நல்லது. தற்போது செம்பட்டையான முடியை எப்படி எளியமுறையில் கருமையாக மாற்றலம் என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையானவை
- அவகேடா -1/2
- முட்டை - 1
- ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- ஒரு பெளலில் முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் அவகேடாவை மசித்து அதனுடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள். நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது இதனுடன் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். ஹேர் மாஸ்க் சரியான பதத்தில் இருக்க வேண்டும்.
- இப்பொழுது இந்த பேஸ்ட்டை தலைமுடி, வேர்கள் மற்றும் தலையில் தடவி வாருங்கள். தலையில் அப்ளை செய்து 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
- 2-3 மணி நேரம் உலர விட்டு பிறகு குளிர்ந்த நீரில் ஷாம்புவைக் கொண்டு அலசவும்.
இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.