அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு இந்த ஒரு எண்ணெய் போதும்
உலகில் உள்ள அனைவருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
இயற்கையான முறையிலேயே முடி வளர்ச்சியை அதிகரிக்க அவகோடா எண்ணெய் பெரிதளவில் உதவுகின்றன.
அவகோடா எண்ணெய் நன்மைகள்
அவகோடா எண்ணெயில் உள்ள வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ சத்து கூந்தலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இதனால் முடி உதிர்வு பிரச்சினையை தடுக்கலாம்.
இந்த அவகேடோ எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நம் தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது.
அவகேடோ எண்ணெயை தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்து வந்தால் பொடுகு தொல்லை நாளடைவில் குணமாகும்.
அவகேடோ எண்ணெயை சிறிதளவு புதினா எண்ணெய் அல்லது ரோஸ்மேரி எண்ணெயுடன் சேர்த்து கலந்து தலையில் அப்ளை செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
இந்த அவகேடோ எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் தலைமுடி வளர்ச்சியும் வலுவடையும்.
தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இந்த அவகேடோ எண்ணெயில் நிறைந்துள்ளாதல் தாராளமாக தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |