நாவூறும் சுவையில் ஆவக்காய் ஊறுகாய்.., இலகுவாக செய்வது எப்படி?
பொதுவாக வீட்டில் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை செய்தால் அதற்கு தொட்டுக்க ஊறுகாயை தான் மனம் தேடும்.
அட்னஹவகையில், நாவூறும் சுவையில் ஆவக்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மாங்காய்- 1 kg
- உப்பு- ½ கப்
- மிளகாய் தூள்- ½ கப்
- கடுகு- ¼ கப்
- வெந்தயம்- ¼ கப்
- செக்கு நல்லெண்ணெய்- ½ லிட்டர்
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் மாங்காயை கொஞ்சம் பெரிய அளவுகளில் நறுக்கி ஒரு மணி நேரம் வீட்டிற்குள்ளேயே காய வைக்கவும்.
பின் பெரிய பாத்திரத்தில் மாங்காயை போட்டு அதில் சூடுபடுத்தி ஆறவைத்த நல்லெண்ணெய்யை ஊற்றி மஞ்சள் தூள் போட்டு கலக்கவும்.
பின் இதில் கல் உப்பை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்.
இதற்கடுத்து கடுகு மற்றும் வெந்தயத்தை நன்கு வறுத்து ஆறவைத்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்த மாங்காயுடன் உப்பு, மிளகாய் தூள் மற்றும் கடுகு- வெந்தய பொடியை சேர்க்கவும்.
இதனை நன்கு கலந்து அதில் 150 மில்லி லிட்டர் நல்லெண்ணெய்யை ஊற்றுவிட்டு மூன்று நாட்களுக்கு துணி போட்டு சுற்றி ஊறவிடுங்கள்.
மூன்று நாட்களில் மாங்காயில் உப்பு, காரம் நன்கு ஊறி எண்ணெய் வெளியேறும். அதன் பிறகு சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |