கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு!
கிருஷ்ண ஜெயந்திக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால், பண்டிகைக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?
பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான அவல் மற்றும் நெய் ஆகியவற்றை பயன்படுத்தி எப்படி எளிதான முறையில் சவையான அவல் லட்டு செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
1 கப் அவல்
-
½ கப் சர்க்கரை
-
¼ கப் நெய்
- 3 முந்திரி பருப்புகள்
-
8 உலர்ந்த திராட்சைகள்
- 2 ஏலக்காய்
செய்முறை
முதலில் அவலை தூசிஇல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஏலக்காயுடன் சர்க்கரையையும் நன்றாக பொடியாக அரைக்கவும்.
அடுத்து நெய்யை சூடாக்கி முந்திரியை மிக சிறிய துண்டுகளாக உடைத்து உலர்ந்த திராட்சைகளும் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் பொடித்த எடுத்த பொருட்களை சூடான நெய்யுடன் சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக அனைத்தையும் உருண்டையான பிடித்து எடுத்து சாப்பிட்டால் சுவையான அவல் லட்டு ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |