கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: 15 நிமிடத்தில் தயாராகும் அவல் பாயாசம்
கிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகின்ற இந்து சமய விழாவாகும்.
இதில் கிருஷ்ணருக்கு பிடித்தமான இனிப்பு, கார வகை உணவுகளை படைத்து வழிபடுவார்கள்.
இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு 15 நிமிடத்தில் சுலபமாக தயார் செய்யக்கூடிய அவலை பயன்படுத்தி பாயசம் செய்து வழிபடுங்கள்.
மேலும் அவல் ஒரு ஆரோக்கியமான உணவு. அவலில் கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து,நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் கொண்டது.
தேவையான பொருள்கள்
- நெய்-தேவைக்கேற்ப
- அவல் - 1 கப்
- தேங்காய் - 3 ஸ்பூன்
- முந்திரிபருப்பு - 10
- திராட்சை - 10
- வெல்லம் - ஒரு கப்
- பால் - அரை லிட்டர்
- ஏலக்காய் - 3
- சுக்கு - சிறிதளவு
- உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
ஒரு வாணலியில் சிறிதளவு நெய் விட்டு ஒரு கப் அளவு சுத்தமான வெள்ளை அல்லது சிவப்பு அவலை சேர்த்து கொள்ள வேண்டும்.
அவலை நன்றாக வறுக்க வேண்டும். வறுத்த அவலை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு பொடியாக நறுக்கிய தேங்காயை சிவக்க வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
அதே நெய்யில் முந்திரி திராட்சையையும் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை பாகு காய்ச்சி கொள்ள வேண்டும்.
Spice container
இதையடுத்து அதே வாணலியில் அரை லிட்டர் அளவு பாலை சேர்த்து சூடாக்க வேண்டும்.
பால் பொங்கி வர ஆரம்பிக்கும் போது ஏற்கனவே நெய்யில் வறுத்து எடுத்த அவலை பாலில் சேர்த்து வேக விட வேண்டும்.
அவல் 3 நிமிடம் வெந்தவுடன் ஏற்கனவே வறுத்து வைத்த தேங்காய், முந்திரி, திராட்சை பழத்தை சேர்த்து இறக்கினால் சுவையான நெய்மணக்கும் அவல் பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |