ஒரு கப் அவல் இருந்தால் போதும்.., சுட சுட அவல் ரொட்டி செய்யலாம்
அவல் காலை உணவுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
அந்தவகையில், உடனடியாக சுட சுட அவல் ரொட்டியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அவல்- 1 கப்
- கேரட்- 1
- வெங்காயம்-1
- பச்சை மிளகாய்- 1
- கொத்தமல்லி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- அரிசி மாவு- ½ கப்
- சீரகம் - 1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
செய்முறை
முதலில் அவலை தண்ணீரில் சேர்த்து 20 நிமிடத்திற்கு நன்கு ஊற வைக்கவும்.
பின் தண்ணீரை வடிகட்டி அவலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.
அடுத்து அதில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் , அரிசி மாவு சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.
இதனையடுத்து அதை 10 நிமிடத்திற்கு ஊறவைத்து கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கொண்டு ஒரு தட்டில் எண்ணெய் தடவி அடை போல் தட்டி எடுக்கவும்.
பின் அதை தோசை தவாவில் போட்டு இரு புறமும் பொன்னிறமாக வரும் வரை சுட்டு எடுத்தால் சுவையான அவல் ரொட்டி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |