பனிப்பாறைச் சரிவு குறித்து கற்கச் சென்ற மாணவர்கள்: செத்துப்பிழைத்த திகில் அனுபவம்
சுவிட்சர்லாந்தில், பனிப்பாறைச் சரிவு குறித்து கற்கச் சென்ற மாணவர்கள் சிலர் செத்துப்பிழைத்த திகில் அனுபவம் ஒன்றை சந்தித்தார்கள்.
பனிப்பாறைச் சரிவு குறித்து கற்கச் சென்ற மாணவர்கள்
சனிக்கிழமையன்று, பனிப்பாறைச் சரிவு குறித்து கற்கபதற்காக சுமார் 40 மாணவ மாணவியர் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைக்குச் சென்றுள்ளார்கள்.
அவர்கள் பல குழுக்களாக பிரிந்து பனிப்பாறைச் சரிவு அபாயத்தைக் குறைப்பது எப்படி என கற்கச் சென்ற நிலையில், மதியம் 1.00 மணியளவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதில், மாணவர்களில் மூன்று பேர் பனிக்குள் புதைந்துள்ளார்கள்.
உடனடியாக அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட, ஹெலிகொப்டர் வருவதற்குள் மற்றவர்கள் வேகவேகமாக பனிய அகற்றி, 10 நிமிடங்களுக்குள் அந்த மாணவர்களை மீட்டுள்ளார்கள்.
பின்னர் ஹெலிகொப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அவர்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சரியான நேரத்தில் அவர்கள் மீட்கப்பட்டதால், அவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும், அவர்கள் நல்ல நிலைமையில் இருப்பதாகவும் அவசர உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |