பனிப்பாறைச் சரிவில் உயிரிழந்த மாணவர்கள்: வழிகாட்டி மீது கொலைக் குற்றச்சாட்டு
சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவில் சிக்கி பதின்மவயதினர் இருவர் உயிரிழந்த விடயம் தொடர்பில், சுற்றுலா வழிகாட்டி மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திலுள்ள உறைவிடப் பள்ளி ஒன்றில் படித்துவந்த மாணவர்கள் சிலரை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் பனிச்சறுக்கு விளையாட அழைத்துச் சென்றுள்ளார்.
பனிப்பாறைச் சரிவில் உயிரிழந்த மாணவர்கள்
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி, அவர்கள் Gstelliwang என்னுமிடத்துக்கு பனிச்சறுக்கு விளையாடச் சென்றுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், அப்போது அங்கு பனிப்பாறைச் சரிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்திருக்கிறது.
ஆனால், எச்சரிக்கையையும் மீறி அந்த வழிகாட்டி பிள்ளைகளை பனிச்சறுக்கு விளையாட அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர்கள் பனிச்சறுக்கு விளையாடும்போது பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பாறைச் சரிவில் சிக்கிய அமெரிக்க மாணவி ஒருவரும், பிரித்தானிய மாணவர் ஒருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
வழிகாட்டி மீது கொலைக் குற்றச்சாட்டு
இந்த வழக்கில், அந்த சுற்றுலா வழிகாட்டி அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அது தொடர்பில் கொலைக்குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவருக்கு 13,500 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவர் உடனடியாக அந்த அபராதத்தைச் செலுத்தவேண்டியதில்லை.
அவர் இரண்டு ஆண்டுகள் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் நிலையில், மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டால் மட்டுமே அந்த அபராதத்தை செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |