மும்பையின் கடைசி நம்பிக்கையையும் தூள் தூளாக்கிய அவேஷ்கான்! மிடில் ஸ்டெம்பை தெறிக்கவிட்ட வீடியோ
மும்பை அணிக்கெதிரான போட்டியில் அற்புதமாக பந்து வீசிய டெல்லி வீரர் அவேஷ்கான் வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 33 ஓட்டங்கள் எடுத்தார். இப்போட்டியில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான அவேஷ்கான் 4 ஓவர் வீசி 15 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
— Simran (@CowCorner9) October 2, 2021
குறிப்பாக கடைசி கட்டத்தில் மும்பை அணியில் விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல் சரிந்து கொண்டிருந்த போது, அந்தணியின் ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யா மட்டும், டெல்லிக்கு ஒரு மிரட்டலாக இருந்தார்.
ஆனால், அவரையும் அவேஷ்கான் தன்னுடைய துல்லியமான யார்க்கர் மூலம் அவுட் ஆக்கி அசத்தினார். அவரின் இந்த யார்க்கர் பந்து வீச்சை யாருமே எதிர்பார்க்கவில்லை. இப்படி அற்புதமாக வீசிய அவேஷ்கானை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.