8 சிக்ஸர்களுடன் 27 பந்தில் 81 ரன் விளாசிய இலங்கை வீரர்! 202 இலக்கினை சேஸ் செய்த அணி
சர்வதேச லீக் டி20 தொடர் போட்டி ஒன்றில் அவிஷ்கா பெர்னாண்டோவின் அதிரடி அரைசதம் மூலம், ஷார்ஜா வாரியர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஷாய் ஹோப் 83
துபாய் கேபிட்டல்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்தது.
முதலில் ஆடிய துபாய் கேபிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 201 ஓட்டங்கள் குவித்தது. ஷாய் ஹோப் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் குவித்தார்.
New ball, please!
— International League T20 (@ILT20Official) January 17, 2025
Nobody's getting hold of that ball! Shai Hope absolutely bludgeoned that back of a length delivery into tomorrow! 💥
Phenomenal batting!#SWvDC #DPWorldILT20 #AllInForCricket @ilt20onzee @dubai_capitals @DPWorldUAE @DP_World pic.twitter.com/JTlFvRPTDt
பின்னர் களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் ஜேசன் ராய், ஜான்சன் சார்லஸ் கூட்டணி 56 ஓட்டங்கள் சேர்த்தது.
அவிஷ்கா விளாசல்
சார்லஸ் 37 ஓட்டங்களில் வெளியேற, இலங்கையின் அவிஷ்கா பெர்னாண்டோ (Avishka Fernando) களமிறங்கினார்.
26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ராய் ஆட்டமிழக்க, அவிஷ்கா ருத்ர தாண்டவம் ஆடினார். சிக்ஸர் மழைபொழிந்த அவர், 27 பந்துகளில் 81 ஓட்டங்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.
A knock so fierce, the bowlers are still searching for answers! 💥🤩#SWvDC #DPWorldILT20 #AllInForCricket@DPWorldUAE @DP_World @ilt20onzee @Sharjahwarriorz pic.twitter.com/P4BMa3d0pB
— International League T20 (@ILT20Official) January 17, 2025
லுக் வெல்ஸ் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுக்க, ஷார்ஜா அணி 18.1 ஓவரில் 202 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சமீரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
What a way to stamp your authority at the #DPWorldILT20!
— International League T20 (@ILT20Official) January 17, 2025
First-ever game in the league, and Avishka Fernando announced his arrival with the fastest-ever 5️⃣0️⃣, taking his side to a memorable win tonight. ✨#SWvDC #AllInForCricket pic.twitter.com/Z8Mte82ptL
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |