ஆப்கானிஸ்தானுக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தான் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால், அந்த நாட்டில் கிரிக்கெட்டின் நிலை இனி என்ன ஆகும்? என்று அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் இருந்த போது, தாலிபான் அமைப்பு, முன்பு இருந்ததைப் போன்று ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் தொடரலாம் என்று அறிவித்தனர்.
இதையடுத்து நேற்று ஆப்கானிஸ்தான் அணியின், புதிய பேட்டிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் Avishka Gunawardene நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை அணிக்காக Avishka Gunawardene 6 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொட்டர் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.