49 பந்தில் 70 ஓட்டங்கள்! காலே அணிக்கு மரண அடி கொடுத்த இலங்கை வீரர்
லங்கா பிரீமியர் லீக் தொடரில் தம்புலா ஆரா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் காலே டைட்டன்ஸை வீழ்த்தியது.
14வது போட்டி
கொழும்பில் நடந்த LPL 14வது போட்டியில் காலே டைட்டன்ஸ் மற்றும் தம்புலா ஆரா அணிகள் மோதின.
முதலில் ஆடிய காலே டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஷானகா 36 (26) ஓட்டங்களும், பௌஸ் 22 (18) ஓட்டங்களும் எடுத்தனர். ஹேமந்தா 2 விக்கெட்டுகளும், ஹசன் அலி, தனஞ்செய டி சில்வா, ஹேடன் கெர், நூர் அகமது மற்றும் பினுரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அவிஷ்கா பெர்னாண்டோ ருத்ர தாண்டவம்
பின்னர் களமிறங்கிய தம்புலா அணியில் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
மறுமுனையில் குசால் மெண்டிஸ் 18 ஓட்டங்களிலும், சதீரா சமரவிக்ரமா 25 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் நின்ற அவிஷ்கா 18வது ஓவரிலேயே வெற்றியை பெற்றுத் தந்தார்.
அவர் 49 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் தம்புலா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
Dambulla Aura take game 14 in style!#LPL2023 #LiveTheAction pic.twitter.com/YVt0fiP1UD
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) August 11, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |