4 ரன்னில் நழுவிய இலங்கை வீரரின் சதம்! செக் வைத்து ரியான் பராக் சாதனை
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 96 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவிஷ்கா பெர்னாண்டோ அரைசதம்
இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி துடுப்பாடி வருகிறது.
நிசங்கா 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, மற்றொரு தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ (Avishka Fernando) அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
சதத்தை நோக்கி பயணித்த அவிஷ்கா 96 (102) ஓட்டங்களில் இருந்தபோது ரியான் பராக் பந்துவீச்சில் lbw முறையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும்.
ரியான் பராக் சாதனை
அதனைத் தொடர்ந்து 38வது ஓவரையும் பராக் வீச, இலங்கை அணித்தலைவர் அசலங்கா (Asalanka) 10 ஓட்டங்களில் lbw ஆகி வெளியேறினார்.
இதன்மூலம் ரியான் பராக் சாதனை ஒன்றை படைத்தார். அதாவது பந்துவீசிய முதல் ஒருநாள் போட்டியிலேயே விக்கெட் எடுத்த 4வது இந்திய வீரர் பராக் ஆவார்.
அதிலும் குறிப்பாக தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை செய்துள்ளார். இதற்கு முன்பு வெங்கட்ராகவன் (1974), ராகுல் டிராவிட் (1999), கலீல் அகமது (2018) ஆகியோர் இந்த சாதனையை செய்திருந்தனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |