கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு இந்த ஒரு பழம் போதும்: இப்படி Use பண்ணுங்க
நம் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
இயற்கையான முறையிலேயே முடி வளர்ச்சியை அதிகரிக்க அவகோடா பழம் ஒன்னு போதும்.
முடி வளர்ச்சிக்கு அவகோடா
அவகோடாவில் இயற்கையான எண்ணெய்கள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோஅன்சாச்சுரெட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் தலைமுடியை வலுவாக்குவதற்கு உதவுகிறது.
இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் முடியை எப்போதும் ஈரப்பதமாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, பி12,, டி மற்றும் பீட்டா கரோட்டின் மற்றும் அயர்ன் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் தலைமுடியை வலுவாக்கி முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.
அவகோடாவில் உள்ள பயோட்டின்கள் முடி உதிர்வதை நிறுத்துவதோடு புதிய முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
மேலும் அவகோடா பழங்களில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் தலைமுடிக்கு இயற்கையான பிரகாசத்தை அளிப்பதோடு தலைமுடியை மென்மையாக்குகிறது.
தயாரிக்கும் முறை
முதலில் பழுத்த அவகோடா பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
அதுபோல, அவகோடா பழங்களுடன் தயிர் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து ஹேர் மாஸ்க் போன்று பயன்படுத்தலாம்.
பின்னர் அதனுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து ஹேர் மாஸ்க் போல உபயோகிக்கலாம்.
மேலும் அவகோடா மற்றும் வாழைப்பழங்களையும் சேர்த்தும் தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.
இந்த ஹேர்மாஸ்க்கை தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு பின் குளிர்ந்த நீரால் அலசிக்கொள்ளலாம்.
இதனை மாதத்திற்கு ஒருமுறையாவது தொடர்ந்து பயன்படுத்தி வர கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |