கொரோனா வந்தவர்கள் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க இதை செய்யுங்கள்: இந்திய அமைச்சர் அட்வைஸ்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படாமல் இருக்க சில அறிவுரைகளை இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கியுள்ளார்.
கொரோனாவால் மாரடைப்பா?
அண்மையில், இந்திய மாநிலம் குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் போது கர்பா நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, அங்கு பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதில் சிறுவன் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில கருத்துக்களை கூறினார்.
கடுமையான வேலை செய்யக் கூடாது
அப்போது பேசிய அமைச்சர், "ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு வருகிறது. கொரோனவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தீவிரமாக வேலை செய்வதையும், தொடர்ந்து வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
மேலும், அவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க 1 முதல் 2 ஆண்டுகள் வரை கடுமையான வேலைகளையும், தீவிரமாக உடற்பயிற்சி செய்வதையும் நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து விடுபடலாம்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |