பிரான்சில் நிகழ்த்தப்பட இருந்த தீவிரவாத தாக்குதல் தவிர்ப்பு: இளைஞர் கைது
பிரான்சில், ஐ.எஸ் அமைப்பின் பேரால் தீவிரவாதத் தாக்குதல் நிகழ்த்த இருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
தென்கிழக்கு பிரான்சிலுள்ள Drome பகுதியில் கைது செய்யப்பட்ட அந்த 18 வயது இளைஞர் மீது பாரீஸில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இஸ்லாமியக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த அந்த இளைஞர் தீவிரவாதக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டுள்ளதால் சமுதாயத்துக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டதால், பிரான்ஸ் நாட்டின் தீவிரவாத எதிர்ப்பு அதிகாரிகள் அலுவலகம் அவர் மீது விசாரணை ஒன்றைத் துவக்கியது.
கத்தி மூலம் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டதாக தெரிவித்த அதிகாரிகள், ஆனால், அவர் யார் மீது அல்லது எங்கு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
எப்படியும், வெள்ளிக்கிழமை அந்த இளைஞர் பொலிசாரிடம் சிக்கியதால், மோசமான தீவிரவாதத் தாக்குதல் ஒன்றும், அதனால் நிகழ இருந்த பெரும் சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது.