ஆட்டத்தை ஆரம்பித்த ரோஹித் சர்மா 49 ரன்னில் கிளீன் போல்டு! அதிரடி காட்டிய இஷான் கிஷனையும் தூக்கிய அக்சர்
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ரோஹித் சர்மா 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
மும்பை வான்கடே மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்து வருகிறது.
டெல்லி அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் மற்றும் கிஷன் இன்னிங்சை தொடங்கினர்.
Early delight for the Wankhede crowd ?
— IndianPremierLeague (@IPL) April 7, 2024
Rohit Sharma unfurls power-packed maximums?
Watch the match LIVE on @JioCinema and @starsportsindia ??#TATAIPL | #MIvDC pic.twitter.com/f9CNA8xcFk
ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியில் மிரட்டினர். குறிப்பாக ஃபார்மிற்கு திரும்பிய ரோஹித் சர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டு விருந்து படைத்தார்.
மறுமுனையில் இஷான் கிஷனும் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களை சோதித்தார். இந்தக் கூட்டணியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
ரோஹித் சர்மா அரைசதம் நோக்கி பயணித்தபோது அக்சர் படேல் ஓவரில் கிளீன் போல்டு ஆனார். அவர் 27 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் அதிரடியில் மிரட்டிய கிஷன் 42 (23) ஓட்டங்களில் அக்சர் படேல் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
Our vote for the Best Catch of IPL 2024 ?pic.twitter.com/3WSTTlqh6e
— Delhi Capitals (@DelhiCapitals) April 7, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |