நாவூறும் சுவையில் கிராமத்து அயிரை மீன் குழம்பு: எப்படி செய்வது?
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று மீன்.
காலை, மதியம், இரவு என மூன்று நேரம் மீன் கொடுத்தாலும் நம்மில் பலர் சலிக்காமல் சாப்பிடுவோம்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் கிராமத்து அயிரை மீன் குழம்பு எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீரகம்- 1 ஸ்பூன்
- தேங்காய்- 1
- பொட்டுக்கடலை- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 15
- நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
- பூண்டு- 5 பல்
- தக்காளி- 2
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மல்லி தூள்- 2 ஸ்பூன்
- புளி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் அம்மி அல்லது ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், தேங்காய், பொட்டுக்கடலை, 4 சின்ன வெங்காயம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின் வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கி பின் தில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கலந்துவிடவும்.
அடுத்து புளி தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.
இறுதியாக கழுவி சுத்தம் செய்து வைத்த அயிரை மீனை சேர்த்து 10 நிமிடம் மூடி போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான அயிரை மீன் குழம்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |