இரவு நேரத்தில் ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோயில்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்
அயோத்தி ராமர் கோயிலின் பிரம்மிக்க வைக்கும் இரவு நேர புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ராமர் கோயில்
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார்.
மேலும், ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கள் அழைக்கப்பட உள்ளனர். இவர்களை தவிர கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
இரவு நேர புகைப்படங்கள்
இந்நிலையில், இரவு நேரத்தில் ஜொலிக்கும் ராமர் கோவில் படத்தை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
மேலும் கோயிலில் பல சிலைகள் நிறுவப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல், கோயில் வளாகங்களில் சுவர்கள் அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |