ஜல சமாதி என்ற பெயரில் சரயு நதியில் வீசப்பட்ட அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல்
அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல் சரயு நதியில் விடப்பட்டு ஜல சமாதி செய்யப்பட்டது.
ஜல சமாதி
அயோத்தி ராமர் கோயிலில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் மகந்த் சத்யேந்திர தாஸ் (85). இவருக்கு இந்த மாதத்தின் தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டது.
இதனால், இவர் சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் உயிரிழந்ததாக கடந்த 12-ம் திகதி மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அயோத்தியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று சரயு நதியில் ‘ஜல சமாதி’ என்ற பெயரில் மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் ஆற்றில் வீசப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |