அயோத்தி ராமர் கோயிலில் தங்கத்தில் கதவுகள் பொருத்தம்.., 100 கிலோவில் தங்க முலாம்
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கதவுகள் தங்கத்தில் பொருத்தம் செய்யப்பட்டுள்ளன.
ராமர் கோயில்
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார்.
மேலும், ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கள் அழைக்கப்பட உள்ளனர். இவர்களை தவிர கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
தங்க கதவுகள்
இந்நிலையில், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கதவுகள் தங்கத்தில் பொருத்தம் செய்யப்பட்டுள்ளன. இந்த கதவுகள் சுமார் 12 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்டது. அடுத்த 3 நாட்களில் 13 கதவுகள் இதை போல பொருத்தப்படவும் உள்ளன.
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் தரப்பில், "கருவறையின் மேல் மாடியில் இந்த கதவுகள் நிறுவப்பட்டுள்ளது எனவும், ராமர் கோயிலில் பொருத்தப்படஉள்ள 46 கதவுகளில் 42 கதவுகள் மீது 100 கிலோ தங்க முலாம் பூசப்படும்” என்றனர்.
மேலும் உத்தர பிரதேச அரசு ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை தேசிய திருவிழாவாக அறிவித்துள்ளது. அதோடு அரசு கட்டடங்களை அலங்கரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |