அதிர்ஷ்டமாக மாறும் அயோத்தி ராமர் கோயில்.., படையெடுக்கும் Coca-Cola, Bisleri, Dabur, Parle நிறுவனங்கள்
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு மக்கள் அலைமோதுவதால் அங்கு FMCG நிறுவனங்கள் படையெடுக்க துவங்கியுள்ளன.
அயோத்தி ராமர் கோயில்
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார்.
மேலும், ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கள் அழைக்கப்பட உள்ளனர். இவர்களை தவிர கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
அங்கு தினமும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால் அயோத்தியில் புதிய விமான நிலையம், சீரமைக்கப்பட்ட புதிய ரயில்நிலையம், அகலமான சாலைகள் மேம்படுத்தப்பட்டதை கண்ட நிறுவனங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளன.
Parle நிறுவனம்
பேக்கேஜ் உணவு தயாரிப்பு நிறுவனமான Parle தயாரிப்புகளின் மூத்த பிரிவின் தலைவர் கிருஷ்ணாராவ் புத்தர் கூறுகையில், " அயோத்தியில் பிஸ்கட்கள், தின்பண்டங்கள், ஸ்நாக்ஸ், பார்லே ப்ராடக்ட்ஸ் ஆகியவற்றின் விநியோகத்தை அதிகரித்துள்ளோம்.
அதற்கு அருகிலுள்ள நகரங்களிலும் கூட அதிகரித்துள்ளோம். இதனால் சப்ளை டிமாண்ட் பிரச்சனை தீர்க்கப்படும்" என்று கூறினார்.
Dabur நிறுவனம்
நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான Dabur இந்தியா, அதன் தயாரிப்புகளின் விநியோகத்தை அயோத்தி நகரத்தில் அதிகரித்து வருகிறது.
மேலும், டாபர் இந்தியா லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி மோஹித் மல்ஹோத்ரா கூறுகையில், "ரியல் ஜூஸ்கள், டாபர் ஆம்லா ஹேர் ஆயில், டாபர் வேதிக் டீ போன்ற பிராண்டுகளை அதிகரிப்பதற்காக சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளிலும் முதலீடு செய்து வருகிறது" என்று கூறியுள்ளார்.
Bisleri நிறுவனம்
பாட்டில் குடிநீர் பிராண்டான Bisleri நிறுவனம், அதன் தயாரிப்புகளை அயோத்தியில் உள்ள அனைத்து சாலை வழிகளிலும் உள்ள நுகர்வு மையங்களில் விநியோகத்தை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பிஸ்லேரி இன்டர்நேஷனல் தலைமை நிர்வாக அதிகாரி ஏஞ்சலோ ஜார்ஜ் கூறுகையில், "அடுத்த சில மாதங்களில் Bisleri ஆலையை அயோத்தியில் தொடங்கவுள்ளோம்" என்றார்.
Coca-Cola நிறுவனம்
Coca-Cola நிறுவனம், உத்தர பிரதேசத்தில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு 24X7 சேவையை உறுதிசெய்ய கூடுதல் உள்கட்டமைப்பு ஆதரவுடன் 50 விற்பனை இயந்திரங்களை வைத்துள்ளது.
கோகோ கோலா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ரூ.10 மற்றும் ரூ.20 விலையில் கோகோ கோலா பானங்கள் கிடைக்க கவனம் செலுத்தப்படுகிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |