சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில ஆயுர்வேத வைத்தியம்!
Cold Fever
Sinusitis
By Kishanthini
அனைவருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ள பொதுவான பிரச்னைகளில் ஒன்று சைனஸ். இது சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
குறிப்பாக, இலையுதிர்காலத்தில், காற்று அடிக்கும்போது பாக்டீரியாத் தொற்று ஏற்பட்டு சைனஸ் வரலாம். இதனை போக்க அடிக்கடி மருந்துகளை வாங்கிபோட வேண்டும் என்ற அவசியமில்லை. சில ஆயுர்வேத வைத்தியங்கள் உள்ளன.
தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம்.
- மஞ்சள் தூள் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெயுடன் நீராவி எடுக்கலாம். இது வறண்ட மூக்கை ஈரப்பதமாக வைக்கும்.
- மூக்கு அடைப்பு இருந்தால் 1 டீஸ்பூன் சீரகத்தை வறுத்து நசுக்கி தேன் சேர்த்து கலந்து காலையில் சாப்பிடலாம். வறுத்த சீரகத்தை 1 டீஸ்பூன் எடுத்து பொடித்து வெள்ளை துனியில் முடித்து மூக்கின் அருகே நுகர்ந்து பார்க்கவும்.
- வெந்தய விதைகள் 1 டீஸ்பூன் எடுத்து 4 கப் தண்ணீரில் சேர்த்து, கலவையை நீர் மட்டம் பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி விடவும். இந்த திரவத்தை தினமும் காலை உணவுக்கு 1 மணி நேரத்துக்கு முன்பு குடிக்கவும்.
- 4 பூண்டு அல்லது 4 சின்ன வெங்காயத்தை நசுக்கி 2 டீஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடவும்.
- பாலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் கருப்பு மிளகுத்தூள் மற்றும் 1 டீஸ்பூன் சுக்குத்தூள் கலந்து குடிக்கலாம்.
- தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து குடிக்கவும். இதை பேஸ்ட் போல் செய்து நெற்றியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
- எலுமிச்சை ஆரஞ்சு, அன்னாசிப்பழம் போன்ற வைட்டமின் சி நிறைந்த புதிய பழங்கள் மறும் பச்சை காய்கறிகள் எடுக்கலாம்.
- காலையில் சூரிய ஒளியில் 7 முதல் 8 மணீக்குள் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.
- காலை மற்றும் படுக்கைக்கு செல்வதற்கு முன் உ ப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்புளிக்கவும்.
- தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கவும்.
- எப்சம் சால்ட் கலந்த வெதுவெதுப்பான நீரில் காலை மற்றும் இரவு முகத்தை கழுவி வந்தால் மூக்கடைப்புக்கு நிவாரணம் கிடைக்கும்.
- கற்பூரத்தூளை 1 டீஸ்பூன் சூடான எண்ணெயுடன் கலந்து மூக்கு மற்றும் நெற்றியின் இருபுறங்களிலும் தடவி விடவும்.
- முட்டைகோஸ் இலைகளை நசுக்கி துணியால் நெற்றியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இது சைனஸ் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US