ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க 3 பொருள்கள் மட்டும் கலந்த இந்த ஆயுர்வேத டீ போதும்
உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் இடையில் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடையை குறைப்பதற்கு பெரும்பாலும் மாத்திரை மருந்துகளை உண்டு உடல் எடையை குறைக்க நினைக்கிறார்கள்.
ஆனால் போதிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவும், உடற்பயிற்சியுமே உடல் எடையை குறைக்க வழிவகுக்கின்றன.
அந்தவகையில் உடல் எடையை குறைக்க 3 மூலிகை பொருட்கள் கலந்த இந்த ஆயுர்வேத டீயே போதுமானது. இதை எப்படி தயாரிப்பது? கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர்- 4 கப்
- சீரகம்- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி விதை- 1 ஸ்பூன்
- பெருஞ்சீரகம்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின் கொதிக்கின்ற நீரில் சீரகம், கொத்தமல்லி விதை, பெருஞ்சீரகம் சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.
இறுதியாக அடுப்பை அனைத்து அதனை வடிகட்டவும், விரும்பினால் அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.
கிடைக்கும் பலன்கள்
இந்த மூன்று விதைகளும் உடல் எடையை குறைக்க உதவுவதில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.
இந்த ஆரோக்கியமான ஆயுர்வேத பானத்தை பருகுவது, உடல் எடையை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும் உதவும்.
மேலும், இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.
இந்த தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், விரைவில் எடை குறையும் மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவும்.
இந்த தேநீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது அதிகபட்ச நன்மைகளை வழங்கும் மற்றும் இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்பும்.
மேலும் பெருஞ்சீரகம் மற்றும் சீரகத்தின் டையூரிடிக் பண்புகள் உடலில் வீக்கம் மற்றும் நீர் தேக்கத்தை திறம்பட குறைக்கும்.
அன்றாட உணவுமுறையுடன் இந்த பானத்தை குடிப்பது எடை மற்றும் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
குறிப்பாக, இந்த பானத்தை தினசரி உணவில் சேர்ப்பதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |