முடி கொட்டாம வேகமாக வளரனுமா? இந்த எண்ணெய்களை வாரம் ஒரு முறையை பயன்படுத்தினாலே போதும்
பொதுவாக இன்று பலருக்கு இருக்கும் பிரச்சினையாக முடி உதிர்வு இருக்கின்றது.
எவ்வளவோ முயற்சிகள் செய்தும் நல்ல பலன் கிடைக்காமல் சங்கடப்பட்டு இதற்காக வருகிறோம். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகள் ஏராளம் விற்பனைக்கு உள்ளன.
அவற்றையெல்லாம் மாதக் கணக்கில் பயன்படுத்தினாலும் கூட நமக்கு சரியான தீர்வு மட்டும் கிடைப்பதில்லை.
ஆனால் இயற்கையாக பெறப்படும் எண்ணெய்கள் மூலம் எளியமுறையில் முடி உதிர்வுக்கு தீர்வினை காணமுடியும். அப்படியான எண்ணெய்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
image - health
- தேங்காயெண்ணெயை இளஞ்சூடாக்கி உச்சந்தலையில் தடவி முடியை வேரிலிருந்து நுனி வரை 10 நிமிடங்கள் கைகளால் மென்மையாக மசாஜ் தடவி வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். குறைந்தது 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு இலேசான க்ளென்சர் கொண்டு கழுவி விடவும். இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு முடிக்கு பளபளப்பையும் கொடுக்கும்.
- பாதாம் எண்ணெயை உச்சந்தலையில் மெதுவாக தடவி வேர் முதல் நுனி வரை வட்ட இயக்கத்தில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். குறைந்தது 30 நிமிடங்கள் அதை விட்டு விட்டு பிறகு இலேசான ஹேர் க்ளென்சர் மூலம் கூந்தலை கழுவி எடுக்கவும். இது முடியை சேதத்திலிருந்து பாதுகாத்து சேதத்தை சரி செய்ய உதவுகிறது.
-
முருங்கை எண்ணெயை உச்சந்தலையில் தடவி வேர் முதல் நுனி வரை வட்ட இயக்கத்தில் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு இலேசான் ஹேர் க்ளென்சர் மூலம் சுத்தம் செய்யவும்.
- பிருங்கிராஜ் எண்ணெயை டபுள் பாய்லிங் மெத்தட் முறையில் சூடுபடுத்தி முடி மற்றும் உச்சந்தலையில் நேரடியாக மசாஜ் செய்யவும். தலைமுடியை அப்படியே விட்டு சூடாக நீரில் நனைத்த மெல்லிய துணியை போர்த்தி கட்டிவிடவும். பிறகு இலேசான முடி சுத்தப்படுத்தியை பயன்படுத்தி மெதுவாக அலசி எடுக்கவும்.
- செம்பருத்தி எண்ணெயை இரட்டை கொதிகலனில் வைத்து சூடுபடுத்தி உச்சந்தலையில் நேரடியாக மசாஜ் செய்யவும். பிறகு வெந்நீரில் நனைத்த டவலை கூந்தலை சுற்றி கட்டி 30 நிமிடங்கள் விட்டு பிறகு சல்பேட் இல்லாத க்ளென்சரை பயன்படுத்தி மென்மையாக அலசவும். இது முடியின் வேர்களை பலப்படுத்துவதால் முடி உதிர்வு கட்டுப்படும். மேலும் முடி வளர்ச்சியையும் தூண்டும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.