தொல்லை கொடுக்கும் குடல் புழுக்கள் வெளியேறனுமா? இதோ சூப்பரான வழிகள்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் தொந்தரவு இந்த புழுக்கடி தொந்தரவு தான். நமது வயிற்றில் வாழும் இந்த புழுக்கள் நிறைய வகைகளில் நம்மை தொந்தரவு செய்கிறது.
இதில் நிறைய வகைகளும் உள்ளன. நூல் புழுக்கள், உருளை புழுக்கள், சாட்டை புழுக்கள், ஜியார்டியா, கொக்கிப் புழுக்கள், நாடாப் புழுக்கள் போன்றவை காணப்படுகின்றன. இந்த புழுக்கள் பெரும்பாலும் மழைக் காலங்களில் தான் அதிகமாக காணப்படுகின்றன.
கெட்ட சுவாசம், வயிற்று போக்கு, கருவளையம், இரவில் தூக்கம் வராமல் கெட்ட கனவுகள் காண்பது, அடிக்கடி பசி எடுத்தல், தலைவலி, அனிமியா போன்ற அறிகுறிகள் குடல் புழுக்களை இருப்பதை தெரியப்படுத்துகின்றன.எனவே இவற்றை ஆரம்பத்திலே அழிப்பது நல்லது.
தற்போது குடல் புழுக்களை ஒழிக்க என்ன மாதிரியான ஆயுர்வேத முறைகளை கையாளலாம் என்பதை பார்ப்போம்.
- கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும் சுத்திகரிக்கப்பட்ட மாவு, பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் அனைத்து சர்க்கரை வகைகளும் தவிர்க்க வேண்டும்.
- மாதுளை, பச்சை பூண்டு, பீட்ரூட், பூசணி விதைகள் மற்றும் கேரட் போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் பாரம்பரியமான ஒட்டுண்ணிகளை கொல்ல பயன்படுத்தப்படுகின்றன. உணவில் நார்ச்சத்து நிறைவாக இருக்கட்டும். இது புழுக்களை அகற்ற உதவக்கூடும்.
- விடங்கம் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலை வேளையில் குடிக்க செய்யலாம்.
- இஞ்சி, கருப்பு மிளகு என்னும் குருமிளகு, பிப்பாளி என்னும் திப்பிலி மற்றும் தேன் ஆகியவற்றை கலந்த கலவையை 15 நாட்களுக்கு எடுத்துகொள்வதன் மூலம் குடல் புழுக்கள் குறைகிறது.
-
தேனுடன் துளசி இலை சாறு சேர்த்து எடுப்பதும் குடல் புழுக்களை வெளியேற்றுவதில் உதவி புரியும்.
- ஓமம், குருமிளகு, பெருங்காயம், கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி, பூண்டு, மஞ்சள் போன்ற உணவு குடற்புழு நீக்கத்துக்கு சிறந்த நன்மை அளிக்கும். ஒரு வாரத்துக்கு தொடர்ந்து வெறும் வயிற்றில் சிட்டிகை உப்பு கலந்து ஓமம் சேர்த்து எடுத்துகொள்ளலாம்.
-
வெதுவெதுப்பான நீரை மட்டுமே குடிக்க வேண்டும். குழந்தைக்கு இளநீர் அல்லது ஓமத்தில் இந்த விடாங் உடன் மருந்து சேர்த்து கொடுக்கவும்.
-
4 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு சிறுதுண்டு காட்டன் எடுத்து நல்லெண்ணெய் அல்லது நிலக்கடலை எண்ணெயில் ஊறவைத்து ஆசனவாயில் வைத்தால் அரிப்பு நீங்கும்.
- தக்காளி 2 அல்லது 3 எடுத்து கருப்பு மிளகு மற்று உப்பு சேர்த்து காலை வெறும் வயிற்றில் 10 நாட்கள் வரை குடிப்பதன் மூலம் குடல் புழுக்கள் வெளியேறும்.
- தினமும் இரண்டு முறை ஒரு கப் கேரட்டை சாப்பிடுவதும் குடல்வழியாக புழுக்களை வெளியேற்ற உதவும்.
- தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி தேங்காயெண்ணெய் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஆசனவாயில் சிறிது தேங்காயெண்ணெய் வைக்கலாம்.
-
அதிகாலை வெறும் வயிற்றில் பப்பாளி சாறு 3 முதல் 4 டீஸ்பூன் வரை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து தேன் சேர்த்து குடிக்கலாம்.
- மாதுளை செடியின் பட்டை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். சில நிமிடங்களுக்கு பிறகு அதை இறக்கி வைத்து இரவு முழுக்க அப்படியே விடவும். இதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
-
குடல் புழுக்கள் வெளியேறும் வரை இதை குடிக்கலாம். வெறும் வயிற்றில் சாற்றை எடுத்துகொள்ளவும். தாமரைத்தண்டு சாறுடன் தேன் ஒரு துளி சேர்த்து சாப்பிடவும்.
-
மோருடன் ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் புழுக்கள் வெளியேறும்.