ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கேதா மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் முதற் கட்ட விசாரணை முறையில், "கல்மேகசாவ்- அசாவா அரிஷ்டா" என்ற பெயரில் உள்ள ஆயுர்வேத சிரப் ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சிரப்பானது குறைந்தது 50 பேருக்கு விற்பனை செய்யப்பட்டள்ளதாகவும். அதில் அதிகளவிலான விஷத்தன்மை கொண்ட "மெத்தில் அல்கோஹால்" என்கிற வேதியியல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதை எடுத்துக்கொண்ட கிராமவாசிக்கு ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், மெத்தில் ஆல்கோஹால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேதா போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேஷ் காதியா தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2 நாட்களில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இது தொடர்பில் கடைக்காரர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |