இந்த பூவிற்கு மாதவிடாய் வலியை சமாளிக்கும் சக்தி உண்டு... இனி டீ போட்டு குடிங்க!
மாதவிடாய் வலியை பல பெண்களும் எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த வலியானது ஒரு பெண்ணின் உடலை முற்றிலும் சோர்வடைய செய்து விடும்.
வலி ஏற்பட்டு விட்டால் ஒரு சில பெண்கள் தங்களது கட்டிலை விட்டு இறங்க மாட்டார்கள். காரணம், அதன் போது ஏற்படும் வயிற்று வலி தான்.
இந்த வலியை போக்குவதற்காக பல வீட்டு வைத்தியங்கள் இருகின்றன. அதில் ஒன்றாக இருப்பது தான் ஆயுர்வேத டீ.
குறிப்பிட்ட இரண்டு பூக்களின் இதழ்களை வைத்து இந்த டீ தயாரிக்கப்படுகிறது. இதை குடிப்பதன் மூலம் பலரின் மாதவிடாய் வலியில் இருந்தும் நிவாரணத்தை பெறலாம்.
ஆகவே அதை எப்படி இலகுவான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
2 நீல பட்டாணி பூக்கள்
-
1 செம்பருத்தி மலர்
- 1 கப் தண்ணீர்
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் போதியளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- பின் அதில் இரண்டு வகை பூக்களையும் சேர்க்கவும்.
- தண்ணீர் ஊதா நிறமாக மாறும் வரை பொருட்களை 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- அடுத்து அதை வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் டீயை குடிக்கலாம்.
- சுவையாக வேண்டுமென்றால் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
செம்பருத்தி இதழ்கள் சேர்ப்பதன் பலன்
இந்தியா, மெக்சிகோ, சூடான், தாய்லாந்து, சவுதி அரேபியா, சீனா மற்றும் எகிப்து போன்ற சூடான இடங்களில் காணப்படும் இந்த மலர். இது பல மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு தாவரமாகும்.
- கொலஸ்ட்ராலை குறைக்கும்
- எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்
-
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்
-
வீக்கத்தைக் குறைக்கும்
- தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும்
நீல பட்டாணி பூ சேர்ப்பதன் பலன்
நீலம் அல்லது பட்டர் பட்டாணி பூ தெற்காசிய நாடுகளில் காணப்படுகிறது. இது வலுவான ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருகிறது.
இரத்த சர்க்கரை அளவு, முடி, சுவாச ஆரோக்கியம் மற்றும் செரிமான அமைப்புக்கு நல்லதாகும்.
குறிப்பு :- பாலூட்டும் பெண்ணாகவோ அல்லது கர்ப்பிணித் தாயாகவோ இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின்றி தேநீர் அருந்தக் கூடாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |