ஒரே இன்னிங்சில் 19 சிக்ஸர்! 55 பந்தில் 165..டி20யில் ருத்ர தாண்டவமாடிய வீரர் (வீடியோ)
தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் விளையாடிய ஆயுஷ் பதோனி 165 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்தார்.
பிரியன்ஸ் ஆர்யா-ஆயுஷ் பதோனி
டெல்லி பிரீமியர் லீக் டி20 போட்டியில் தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய தெற்கு டெல்லி அணியில் சர்தக் ரே 11 ஓட்டங்களில் வெளியேற, பிரியன்ஸ் ஆர்யா மற்றும் ஆயுஷ் பதோனி (Ayush Badoni) இருவரும் ரன் வேட்டையாடினர்.
6️⃣ ????? ?? ?? ???? ?
— Delhi Premier League T20 (@DelhiPLT20) August 31, 2024
There’s nothing Priyansh Arya can’t do ?#AdaniDPLT20 #AdaniDelhiPremierLeagueT20 #DilliKiDahaad | @JioCinema @Sports18 pic.twitter.com/lr7YloC58D
குறிப்பாக பிரியன்ஸ் ஆர்யா ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி வாணவேடிக்கை காட்டினார். இதன்மூலம் உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் ராஸ் வைட்லி (2017), ஹஸ்ரதுல்லா ஸஸாய் (2018) மற்றும் லியோ கார்ட்டர் (2020) ஆகியோருடன் பிரத்யேக கிளப்பில் இணைந்தார்.
சர்வதேச அளவில் யுவ்ராஜ் சிங், கெய்ரன் பொல்லார்டு, திபேந்திர சிங் ஐரி (இருமுறை) இந்த சாதனையை செய்துள்ளனர்.
Ayush Badoni went ?????+?+⬅️➡️⬆️⬇️ ?? #IYKYK
— Delhi Premier League T20 (@DelhiPLT20) September 1, 2024
? 3rd highest individual score in T20s
? Most sixes by a player in an innings (19)#AdaniDelhiPremierLeagueT20 #AdaniDPLT20 #DilliKiDahaad #Cricket07 @LucknowIPL @JioCinema @Sports18 @delhi_cricket pic.twitter.com/Vskj7qrAge
தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் வெற்றி
பதோனி 55 பந்துகளில் 19 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 165 ஓட்டங்கள் குவித்தார். பிரியன்ஸ் ஆர்யா 50 பந்துகளில் 10 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 120 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 308 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய வடக்கு டெல்லி அணி 196 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக பிரன்ஷு விஜய்ரன் 32 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் எடுத்தார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |