11 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 181 ரன்! ஜெய்ஸ்வாலின் இமாலய சாதனையை முறியடித்த 17 வயது வீரர்
விஜய் ஹசாரே கிண்ணப் போட்டியில் ஆயுஷ் மத்ரே 181 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்தார்.
முதல் விக்கெட்டுக்கு 156
மும்பை மற்றும் நாகலாந்து அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற நாகலாந்து பந்துவீச்சை தெரிவு செய்ய மும்பை அணி முதலில் துடுப்பாடியது.
ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி மற்றும் ஆயுஷ் மத்ரே மிரட்டலான தொடக்கம் அமைத்தனர். ரகுவன்ஷி 66 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இவர்களது கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 156 ஓட்டங்கள் குவித்தது.
ருத்ர தாண்டவமாடிய வீரர்
அதன் பின்னர் பிஸ்டா (2), சூர்யாஷ் (5) சொதப்ப ஆயுஷ் மத்ரே (Ayush Mhatre) ருத்ர தண்டமாடினார். 117 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 181 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் List A தொடரில் இளம் வயதில் (17 வயது 168 நாட்கள்) 150 ஓட்டங்களுக்கு மேல் குவித்த ஜெய்ஸ்வாலின் (17 வயது 291 நாட்கள்) சாதனையை முறியடித்தார்.
அதன் பின்னர் சித்தேஷ் 39 ஓட்டங்களும், பிரசாத் பவர் 38 ஓட்டங்களும் விளாசினர். அணித்தலைவர் ஷர்துல் தாக்கூர் சிக்ஸர் மழை பொழிந்து 28 பந்துகளில் 73 ஓட்டங்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 403 ஓட்டங்கள் குவித்தது. திப் ஜூகன் போரா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய நாகலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |