CSKயில் விளையாடும்போதே.,அதிகதொகைக்கு வேறொரு அணியால் வாங்கப்பட்ட இளம் வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆயுஷ் மாத்ரேவை ட்ரையம்ப் நைட்ஸ் ரூ.14.75 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.
ஆயுஷ் மாத்ரே
நடப்பு ஐபிஎல் தொடரில் இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
இதுவரை இவர் விளையாடிய 4 இன்னிங்ஸில் 163 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் இவர் விளாசிய 94 ஓட்டங்களும் அடங்கும்.
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்றாக ஆயுஷ் மாத்ரே களமிறக்கப்பட்டார். தற்போது இவர் சென்னை அணியின் சிறந்த தொடக்க வீரராக மாறி வருகிறார்.
17 வயதான ஆயுஷ் மாத்ரேவை சென்னை (CSK) அணி இவரை ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
பாரியதொகைக்கு வாங்கிய அணி
இந்த நிலையில் டி20 மும்பை லீக் தொடரில் விளையாட பாரிய தொகைக்கு இவர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ட்ரையம்ப் நைட்ஸ் (Triumph Knights) என்ற அணி ஆயுஷ் மாத்ரேவை ரூ.14.75 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.
அபாரமான துடுப்பாட்டத்தினால் நான்கே போட்டிகளில் ஆயுஷ் மாத்ரேவின் மதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |