ஐபிஎல் போட்டியில் பறந்த இமாலய சிக்சர்! பெண் ரசிகை தலையை பதம் பார்த்த பந்தின் வீடியோ
ஐபிஎல் தொடரில் லக்னோ வீரர் அடித்த இமாலய சிக்சர் பெண் ரசிகையின் தலையை பதம் பார்த்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
இப்போட்டியில் லக்னோ வீரர் அடித்த ஒரு சிக்சர், பெண் ரசிகையின் தலையில் விழுந்தது. அதில் போட்டியின் 19-வது ஓவரை சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே வீசினார்.
அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஆயுஷ் படோனி சிக்சர் விளாசினார். அந்த பந்து ஸ்டேடியத்தில் இருந்த பெண் ரசிகையின் தலையில் விழுந்தது. இதில் அவருக்கு பெரியளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.
This six from bidoni injured a lady in crowd #CSKvLSG pic.twitter.com/ppzRTvm3Lf
— timeSquare?? (@time__square) March 31, 2022