இது நல்லா இருக்காது! இந்தியா தோல்வி குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் நெகிழ்ச்சி கருத்து
நியூசிலாந்துடனான தோல்விக்கு பிறகு இந்தியா குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அசார் அலி நெகிழ்ச்சி கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று துபாயில் நடந்த சூப்பர 12 போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு கடினமாகியுள்ளது.
சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-வில் உள்ள இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அசார் அலி இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவுக்கு நல்லதல்ல.. ஆனால், உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தொடர வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.
It’s not looking good for India.. but we all want India to stay in the tournament. This early exit of India won’t be good for the event ? #INDvsNZ #ICCT20WorldCup
— Azhar Ali (@AzharAli_) October 31, 2021
தொடரலிருந்து இந்தியா முன்கூட்டியே வெளியேறுவது உலகக் கோப்பை நிகழ்வுக்கு நல்லதாக இருக்காது என அசார் அலி கருத்து தெரிவித்துள்ளார்.