முதல் முறையாக LPL கோப்பையை கைப்பற்றிய கண்டி அணி! சாதித்துக் காட்டிய ஏஞ்சலோ மேத்யூஸ்
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4வது சீசனில் கண்டி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இறுதிப் போட்டி
LPL-யில் மூன்று முறை சாம்பியனான ஜாஃப்னா அணி இறுதிப் போட்டிக்கு செல்லாததால், முதல் முறையாக வேறொரு அணி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு உருவானது.
கொழும்பில் நடந்த இறுதிப் போட்டியில் தம்புலா ஆரா மற்றும் பி-லவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய தம்புலா அணி 147 ஓட்டங்கள் எடுத்தது. தனஞ்செய டி சில்வா 40 ஓட்டங்களும், சமரவிக்ரமா 36 ஓட்டங்களும் குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய கண்டி அணியில் கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களும், ஹாரிஸ் 26 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
கண்டி அணி சாம்பியன்
அடுத்து வந்த தினேஷ் சண்டிமல் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சதுரங்க டி சில்வா, ஆசிப் அலி அவுட் ஆக கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் வெற்றிக்காக போராடினார்.
கடைசி ஓவரில் 2 பந்துகளில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், லஹிரு மதுஷன்கா பவுண்டரி விளாச கண்டி அணி சாம்பியன் ஆனது.
இறுதிவரை களத்தில் நின்ற மேத்யூஸ் 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |