ரூ.12,484 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை வெறும் ரூ.74க்கு விற்ற எமிரேட்ஸ் தொழிலதிபர்: ஏன் தெரியுமா?
ரூ.12,484 கோடி மதிப்புள்ள தனது நிறுவனத்தை வெறும் ரூ.74-க்கும் விற்கும் நிலைக்கு தொழிலதிபர் ஒருவர் தள்ளப்பட்டுள்ளார்.
யார் அந்த தொழிலதிபர்?
தமிழக மாவட்டமான கர்நாடகாவைச் சேர்ந்தவர் பவகுத்து ரகுராம் ஷெட்டி (B. R. Shetty). இவர், வளைகுடா நாட்டிற்கு சென்று தொழில் தொடங்கி பெரிய கோடீஸ்வரராக மாறியுள்ளார். இவர் அங்கு சென்று NMC Health மற்றும் Finablr போன்ற நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
ஃபோர்பஸ் பத்திரிக்கையின் படி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற B. R. Shetty -யின் சொத்து மதிப்பு மட்டுமே 3.15 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
ரூ.74 -க்கு விற்கப்பட்ட நிறுவனம்
இவருக்கு, புர்ஜ் கலிஃபாவில் விலை உயர்ந்த மாளிகை, பல சொகுசு கார்கள், சொந்தமாக ஜெட் விமானங்கள் ஆகியவை இருந்தது. இவருடைய நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டு ஆய்வு நிறுவனம் ஒன்றின் குற்றச்சாட்டின் பேரில் சரிந்தது.
இதனால், ரூ.12,484 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை வெறும் ரூ.74 -க்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். குறிப்பாக இவர் அந்த நாட்டில் மருத்துவ துறை மற்றும் ஹொட்டல் துறையில் பல நிறுவனங்களை உருவாக்கினார்.
தனது திறமை மற்றும் தொலைநோக்கு பார்வையால் ரூ.18,000 கோடி அளவிற்கு தனது சொத்துக்களை ஷெட்டி அதிகரித்தார். மேலும், துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்திலும் இவருக்குச் சொந்தமாக இடங்கள் உள்ளன.
ஆனால், 2019 -ம் ஆண்டு இவருக்கு பெரிய சரிவை கொடுத்தது. இவர் தனக்கு இருக்கும் கடனை மறைப்பதற்காக பொய்யான கணக்கை காண்பித்துள்ளார். இவர் மீது இங்கிலாந்து முதலீட்டு ஆய்வு நிறுவனமான Muddy Waters குற்றம் சாட்டியது.
அப்போது தான் இவரது பங்குகளின் சரிவுகள் சரிந்தது. இந்த விவகாரத்தால் தான் தனது ரூ.12,484 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை வெறும் ரூ.74 -க்கு விற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |