B.Ed சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
இந்தியாவில் அரசு. அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள B Ed பட்டப்படிப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்கள். அதற்கான கட்டணம் மற்றும் எந்த இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
விண்ணப்பத்தை விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் வேளையில் www.tngasa.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- செலுத்தப்பட வேண்டும். எஸ்சி/ எஸ்டி விண்ணப்பதாரர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு/ இணைய பேங்கிங்/ யுபிஐ மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம்.
இவ்வாறு செலுத்த முடியாதவர்கள் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai — 15” என்ற பெயரில் 01.09.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவோ அல்லது நேரடியாகவும் செலுத்த முடியும்.
மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் இணையதளம் வாயிலாக தெரிந்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் தொடங்கும் நாள் - 01.09.2023
-
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்- 11.09.2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |