பிரித்தானியா விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானம்! வெளியான வீடியோ
பிரித்தானியா விமான நிலையத்தில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
தலைநகர் லண்டனில் உள்ள Heathrow விமான நிலையத்திலே இந்த விபத்து நடந்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து Heathrow வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானவே விபத்துக்குள்ளாகியுள்ளது.
Heathrow வந்தடைந்த போயிங் 787 Dreamliner சரக்கு விமானத்தின் முன் சக்கரம் உடைந்து முன் பகுதி தரையில் மோதி சேதமடைந்துள்ளது.
விபத்தை அடுத்து அவசர சேவைகள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளன.
A British Airways 787 Dreamliner just suffered a nose gear collapse at Heathrow Terminal 5 this morning, while preparing for flight 😭😭 #UB1UB2 pic.twitter.com/unFmjBzGvc
— UB1UB2 (@UB1UB2) June 18, 2021
விபத்தின் போது விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை எனவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.