உலகப் பொருளாதார நெருக்கடி... 2026 தொடர்பில் பாபா வங்காவின் கணிப்பால் அச்சம்
பால்கன்களின் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என கணித்துள்ளார்.
டிஜிட்டல் நாணயம்
பாபா வங்கா கணித்துள்ள Cash Crush என்பது பணம் அல்லது டிஜிட்டல் நாணயமாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து நிலையற்றதாக இருக்கும் உலக சந்தை, அதிகரிக்கும் பணவீக்கம், அதிகரிக்கும் வட்டி விகிதங்கள் உள்ளிட்ட காரணிகளால் பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.
பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாகிவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து உலக நாடுகள் பல்வேறு விவாதங்களையும் கவலையளிக்கும் உரையாடல்களையும் தொடங்கியுள்ளது.
பாபா வங்கா கணித்துள்ள Cash Crush என்பது உலகம் ஒரு கட்டத்தில் முழு பணவியல் அமைப்பின் சரிவையும் அனுபவிக்கும் என்பதே. இது மிகப் பெரிய வங்கி திவால்நிலைகள், பேரழிவு தரும் நாணய மதிப்பிழப்பு மற்றும் உலகளவில் கடுமையான பணப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.
கடும் நெருக்கடி
பாபா வங்காவின் கணிப்பு நடந்தால், உலகளாவிய தாக்கம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர், குறிப்பாக ஏற்கனவே மந்தநிலை, எரிசக்தி நெருக்கடிகள் அல்லது நிதிக் கொள்கைகளில் உறுதியற்ற தன்மையை எதிர்கொண்டுள்ள நாடுகள் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.
தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவிலான பணிநீக்கங்கள் நடந்து வருகின்றன, ரஷ்ய-உக்ரேனிய மோதல் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்துகிறது, மேலும் கிரிப்டோகரன்சி முதலீட்டின் மதிப்பு சரிந்து வருகிறது.
ட்ரம்பின் ஒரே ஒரு அறிவிப்பால் கிரிப்டோ முதலீட்டில் பல பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காரணிகள் அனைத்தும் சேர்ந்து, பாபா வங்காவின் கணிப்பை ஓரளவு உண்மையாக்குவதாகவே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |