59 பந்துகளில் 103 ரன் விளாசிய பாபர் அஸாம்: தெறிக்கவிட்ட குசல் மெண்டிஸ்..PSLயில் மிரட்டல்
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பெஷாவர் ஜால்மி அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத்தை வீழ்த்தியது.
பாபர் அஸாம் 103 ஓட்டங்கள்
இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் பெஷாவர் ஜால்மி அணிகளுக்கு இடையிலான போட்டி கராச்சியில் நடந்தது.

முதலில் ஆடிய பெஷாவர் அணியில் மொஹம்மது ஹாரிஸ் 16 பந்துகளில் 35 ஓட்டங்களும், குசல் மெண்டிஸ் 26 பந்துகளில் 41 ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
ருத்ரதாண்டவம் ஆடிய பாபர் அஸாம் 59 பந்துகளில் 103 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும்.
221 ஓட்டங்கள் குவிப்பு
இதன்மூலம் பெஷாவர் ஜால்மி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் குவித்தது. ஷதாப் கான் 3 விக்கெட்டுகளும், ரிச்சர்ட் க்ளீஸன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய இஸ்லாமாபாத் அணி 18.4 ஓவர்களில் 151 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதால், பெஷாவர் அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சமீர் மின்ஹாஸ் 44 (23) ஓட்டங்களும், மொஹ்சின் ரியாஸ் 25 (20) ஓட்டங்களும், இமாத் வஸீம் 22 (15) ஓட்டங்களும் எடுத்தனர். ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகளும், மொஹம்மது பஸித் மற்றும் சுஃபியான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |