58 பந்தில் சதம் விளாசிய கேப்டன்!
லாகூரில் நடந்த டி20 போட்டியில் நியூசிலாந்தை 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.
பாபர் அசாம் அபார சதம்
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் குவித்தது.
ருத்ர தாண்டவம் ஆடிய கேப்டன் பாபர் அசாம் 58 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசினார்.
A third T20I hundred for Babar Azam gives Pakistan a tall total ?#PAKvNZ | ? https://t.co/pzQPaCIIau pic.twitter.com/x0xUYpkD8F
— ICC (@ICC) April 15, 2023
விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 34 பந்துகளில் 50 ஓட்டங்களும், இஃப்திகார் அகமது 19 பந்துகளில் 33 ஓட்டங்களும் எடுத்தனர். நியூசிலாந்தின் மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நியூசிலாந்து தோல்வி
பின்னர் ஆடிய நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களே எடுத்ததால் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 40 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசினார்.
@ICC (Twitter)
டி20யில் மூன்றாவது சதம் அடித்த பாபர் அசாம் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி 17ஆம் திகதி நடக்க உள்ளது.
Pakistan were again too strong for New Zealand in the second T20I ?#PAKvNZ | https://t.co/P2z7mYyUhF pic.twitter.com/f0MKkkt2Qd
— ICC (@ICC) April 16, 2023
Another stunning Babar Azam knock ?
— ICC (@ICC) April 16, 2023
The Pakistan skipper on form in Lahore in the second #PAKvNZ T20I ?
More: https://t.co/2IthURyhSk pic.twitter.com/zXYqMnALPB