437 ரன் இலக்கு..அரைசதத்தை தவறவிட்டு விரக்தியில் வெளியேறிய பாபர் அஸாம்
வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஷான் மசூத் 71 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பாபர் அஸாம் 47 ஓட்டங்கள்
சில்ஹெட்டில் நடந்து வரும் வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில், பாகிஸ்தான் அணி 437 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடி வருகிறது.

தொடக்க வீரர்களான ஃபாஸல் 6 ஓட்டங்களிலும், அஸன் அவைஸ் 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் ஷான் மசூத் (Shan Masood) மற்றும் பாபர் அஸாம் (Babar Azam) இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
மசூத் நிதானமாக ஆட பாபர் அஸாம் விரைவாக ஓட்டங்களை சேர்த்தார். அவர் 47 ஓட்டங்களில் (52 பந்துகள், 1 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள்) இருந்தபோது டைஜூல் இஸ்லாம் பந்துவீச்சில் லித்தன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மொஹம்மது ரிஸ்வான், சல்மான் ஆகா அரைசதம்
எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்ததால் பாபர் அஸாம் விரக்தியுடன் களத்தை விட்டு வெளியேறினார். மறுமுனையில் ஷான் மசூத் அரைசதம் அடைத்தார்.
சவுத் ஷகீல் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஷான் மசூத் 71 ஓட்டங்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
தற்போது வரை பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சல்மான் ஆகா (52), மொஹம்மது ரிஸ்வான் (59) இருவரும் ஆடி வருகின்றனர்.
[76OOL ]
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |