மிரட்டல் சதம் விளாசல்! தனியாளாய் இலங்கைக்கு நெருக்கடி அளித்த பாகிஸ்தான் கேப்டன்
காலே டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சதம் அடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், பாகிஸ்தான் அணி 218 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது.
துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையில், கேப்டன் பாபர் அசாம் தனியாளாய் இலங்கை அணியை மிரட்டினார்.
நங்கூரம் போல் நின்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7வது சதத்தை நிறைவு செய்தார்.
இதன்மூலம் குறைந்த சர்வதேச இன்னிங்சில் விளையாடி அதிக சதங்கள் அடித்த பாகிஸ்தான் கேப்டன் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றுள்ளார். அவர் 70 இன்னிங்சில் 9 சதம் விளாசியுள்ளார்.
PC: Twitter (@TheRealPCB)
அவரது பொறுப்பான ஆட்டத்தினால் பாகிஸ்தான் அணி 200 ஓட்டங்களை கடந்தது. இறுதியில் பாபர் அசாம் 119 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதில் இரண்டு சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கும்.
கடைசி விக்கெட்டுக்கு பாபர் அசாம்-நசீம் ஷா ஜோடி 70 ஓட்டங்கள் குவித்தது. ஒருவழியாக திக்க்ஷணா இந்த ஜோடியை பிரித்து பாகிஸ்தான் இன்னிங்சிற்கு முடிவு கட்டினார்.
PC: Twitter (@TheRealPCB)