அணியை மீட்டெடுத்து பென் ஸ்டோக்ஸை பின்னுக்குத்தள்ளிய பாபர் அஸாம்
வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாபர் அஸாம் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸை பின்னுக்குத் தள்ளினார்.
பாபர் அஸாம் அதிரடி
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடந்து வருகிறது.

வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 278 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் 23 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து அணித்தலைவர் ஷான் மசூத்தும் 21 ஓட்டங்களில் வெளியேற, பாபர் அஸாம் வேகமாக ஓட்டங்களை சேர்த்து அணியை மீட்டெடுத்தார்.
நிதானமாக ஆடிய சவுத் ஷகீல் 8 ஓட்டங்களில் வெளியேற, பாபர் அஸாம் (Babar Azam) 31வது அரைசதம் அடித்தார். மேலும் இது அவருக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 20வது அரைசதம் ஆகும்.
வங்காளதேசம் முன்னிலை
இதன்மூலம் அவர் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸை பின்னுக்குத் தள்ளினார். தொடர்ச்சியாக பவுண்டரிகளை விரட்டிய பாபர், 84 பந்துகளில் 68 ஓட்டங்கள் (10 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் நஹித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் விக்கெட்டுகள் சரிய, சாஜித் கான் அதிரடியாக 28 பந்துகளில் 38 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) விளாசினார்.
பாகிஸ்தான் அணி 232 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, வங்காளதேச அணிக்கு 46 ஓட்டங்கள் முன்னிலை கிடைத்தது. நஹித் ராணா, டைஜூல் இஸ்லாம் தலா 3 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது மற்றும் மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஆட்டநேர முடிவில் வங்காளதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மஹ்முதுல் ஹசன் 52 (64) ஓட்டங்களும், மொமினுள் ஹக் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |