ஜாம்பவான்களின் சாதனைகளை தூள் தூளாக்கி வரலாறு படைத்த பாபர் அசாம்!
பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் டி20யில் அதிவேகமாக 10,000 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் ஸல்மி அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடி வருகிறது.
லாகூரில் நடந்த கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 72 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார். அதாவது அவர் அதிவேகமாக 10,000 ஓட்டங்களை கடந்துள்ளார்.
இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 285 இன்னிங்ஸ்களில் படைத்த இந்த சாதனையை, பாபர் அசாம் 271 இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார்.
@PSLt20
109 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம், மூன்று சதங்களுடன் 3,698 ஓட்டங்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20யில் 10,000 ஓட்டங்கள் குவித்த வீரர்கள்:
பாபர் அசாம் (271 இன்னிங்ஸ்)
கிறிஸ் கெய்ல் (285 இன்னிங்ஸ்)
விராட் கோலி (299 இன்னிங்ஸ்)
டேவிட் வார்னர் (303 இன்னிங்ஸ்)
ஆரோன் பின்ச் (327 இன்னிங்ஸ்)
ஜோஸ் பட்லர் (350 இன்னிங்ஸ்)
@AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |