மிரட்டல் வீரரின் உலக சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்!
27 வயதாகும் பாபர் அசாம், 90 ஒருநாள் போட்டிகளில் 17 சதம், 20 அரைசதங்கள் எடுத்துள்ளார்
தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா 181 ஒருநாள் போட்டிகளில் 8113 ஓட்டங்கள் விளாசியிருந்தார்
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் அரை சதம் அடித்ததன் மூலம் உலக சாதனை படைத்தார்.
ரொட்டர்டாமில் நடந்த ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 314 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 298 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 85 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுத்தார்.
PC: Twitter
இதன்மூலம் அவர் குறைந்த இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்தார். ஆம்லா 88 இன்னிங்சில் 4473 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், பாபர் அசாம் 88 இன்னிங்சில் 4481 ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
மேலும், பாபர் 8 இன்னிங்சில் 7 முறை அரைசதம் கடந்துள்ளார். இதில் 4 சதங்கள் அடங்கும். அத்துடன் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 60 சராசரியை கொண்டுள்ளார்.