முறியடிக்க முடியாத கோலியின் உலக சாதனை.. அசால்டாக உடைத்த பாகிஸ்தான் கேப்டன்!
ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 1000 ஓட்டங்கள் எடுத்து விராட் கோலியின் மிகப்பெரிய சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சதம் விளாசினார். 107 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக மிக விரைவாக 1000 ஓட்டங்களை பாபர் அசாம் அடைந்தார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி 17 இன்னிங்சில் 1000 ஓட்டங்கள் எடுத்து, சாதனை படைத்திருந்தார். ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து குறைந்த இன்னிங்சில் இந்த ஸ்கோரை எடுத்து கோலி சாதனை படைத்திருந்தார்.
Photo Credit: Twitter
யாரும் முறியடிக்க முடியாது என்று கருதப்பட்ட அந்த சாதனையை, பாபர் அசாம் 13 இன்னிங்சிலேயே தற்போது முறியடித்துள்ளார்.
மேலும் கோலி 58.07 சராசரி வைத்திருக்கும் நிலையில், பாபர் அசாம் 59.78 சராசரி வைத்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 43 சதங்கள் அடித்துள்ள கோலியின் சாதனையை, பாபர் அசாம் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: Twitter