விராட் கோலியின் சாதனையை தூள் தூளாக்கி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் படைத்த புதிய சாதனை!
சர்வதேச டி20 போட்டியில் புதிய சாதனை படைத்துள்ள பாபர் அசாம், விராட் கோலியின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர்அசாம் 34 பந்தில் 39 ரன் எடுத்தார்.
இதில் 32-வது ரன்னை தொட்டபோது அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 2,500 ரன்னை எடுத்தார். 62 இன்னிங்சில் அவர் இந்த ரன்னை தொட்டார்.
இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். விராட் கோலி 68 இன்னிங்சில் 2,500 ரன்னை தொட்டிருந்தார்.
தற்போது இந்த ரன்னை தொட்ட அதிவேக வீரர் என்ற சாதனையில் பாபர் ஆசம் உள்ளார்.
பாபர் ஆசம் 62 இன்னிங்சில் 2,507 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.21 ஆகும். ஒரு சதமும், 24 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 122 ரன் குவித்துள்ளார்.