இப்ப சொல்றேன்.. அடுத்த 10 ஆண்டுகளில் இவர் எல்லா சாதனையையும் முறியடிப்பார்! இன்சமாம் உல் ஹக்
இந்தியாவுடனான வெற்றியின் மூலம் அவர்கள் எவ்வளவு ஆப்பதானவர்கள் என்பதை பாகிஸ்தான் வெளிப்படுத்தியுள்ளனர் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
நேற்று துபாயில் நடந்த உலகக் கோப்பை ‘சூப்பர் 12’ போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாபசர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வரலாற்று சாதனை படைத்தது.
பாபர் அசாமை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், அவருக்கு இருக்கும் திறமைக்கு அவர் அடுத்த 10 ஆண்டுகளில் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என நம்புகிறேன்.
பாபர் அசாமின் செயல்பாடு இந்திய கேப்டன் கோலியை விட சிறப்பாக உள்ளது.
பயிற்சி போட்டியின் போது கூட இந்தியாவுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதில் அசாம் தெளிவாக இருந்தார்.
பாகிஸ்தான் வீரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள இந்த வெற்றி அணி தொடர வேண்டும் என இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, இந்த உலகக் கோப்பையை வெல்ல இந்தியா அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இன்சமான் உல் ஹக் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.