இந்தியாவுடனான தோல்வி எதிரொலி! பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும்..பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு
இந்தியாவுடனான தோல்வியால் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக என எதிர்ப்பு கிளம்பியுள்ளது
பாபர் அசாம் 32 வயதாகும் போது கேப்டன்சி குறித்து நன்கு கற்றுக் கொள்வார் - முன்னாள் வீரர் ஹபீஸ்
இந்திய அணியுடனான தோல்வியால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த 23ஆம் திகதி மெல்போர்னில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது.
முதலில் துடுப்பாட்டம் செய்த பாகிஸ்தான் அணி 159 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். பின்னர் ஆடிய இந்திய அணி 20வது ஓவரின் கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
AFP
பரபரப்பான சூழலில் கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளருக்கு பாபர் அசாம் கொடுத்தது கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் பாபர் அசாமின் தலைமை சரி இல்லை என்றும்,அவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
AFP
இதுதொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் கூறுகையில், 'இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் மூத்த வீரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கேப்டன் ஒரு நல்ல முடிவை எடுக்க முடியாவிட்டால், அவர் எங்கே தவறு செய்கிறார் என்று சீனியர்களிடம் பேசலாம். அதனால் தான் நான் எப்போதும் கூறுவது மூத்த வீரர் ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் இருக்க வேண்டும்.
அவருக்கு ஆலோசனை வழங்க முடியும். பல வருடங்களுக்குப் பிறகு, உங்களால் சரியாக வழிநடத்த முடியவில்லை என்றால், அதை விட்டுவிடுவது நல்லது. கடந்த காலங்களில் பலர் அதை விட்டுவிட்டனர், நீங்கள் மீண்டும் மீண்டும் அதே தவறுகளை செய்தால், கேப்டன் பதவியை விட்டு வெளியேறுவதில் எந்தத் தவறும் இல்லை' என தெரிவித்துள்ளார்.
AFP