பிரம்மாண்ட சாதனை படைத்த பாபர் அசாம்! இங்கிலாந்துக்கு எதிராக ருத்ர தாண்டவ ஆட்டம்
சாதனை படைத்த பாபர் அசாம் 62 பந்துகளில் சதம் விளாசினார்
பாபர் அசாம் - ரிஸ்வான் கூட்டணி 203 ஓட்டங்கள் எடுத்தது, டி20 போட்டிகளில் ஐந்தாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சதம் விளாசி சாதனை படைத்தார்.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்கள் குவித்தது.
கேப்டன் மொயீன் அலி 23 பந்துகளில் 55 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 203 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
Twitter
கேப்டன் பாபர் அசாம் அதிரடியாக 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 110 ஓட்டங்கள் எடுத்தார். இந்த சதத்தின் மூலம் பாபர் அசாம் புதிய சாதனை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
Twitter
முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள் எடுத்தார்.